/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தேக நபரின் நடமாட்டம்; குடியிருப்பில் மக்கள் அச்சம்
/
சந்தேக நபரின் நடமாட்டம்; குடியிருப்பில் மக்கள் அச்சம்
சந்தேக நபரின் நடமாட்டம்; குடியிருப்பில் மக்கள் அச்சம்
சந்தேக நபரின் நடமாட்டம்; குடியிருப்பில் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 24, 2025 11:50 PM
திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், லோட்டஸ் கார்டன் மற்றும் ஏ.சி.எஸ்., மாடர்ன் கார்டன் சிட்டியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நடமாடி வருகின்றார். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் 'சிசிடிவி' பதிவுகளை பார்த்தனர்.
அதில், நள்ளிரவில் வீடுகள் அருகே அரை நிர்வாணத்துடன் வலம் வருகின்றார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில், 2 ஆயிரம் ரூபாய் திருடு போனது மற்றும் தெருநாய் ஒன்று திடீரென இறந்து போனது. வீடுகளில் கைவரிசை காட்ட, தெருநாய் கொள்ளப்பட்டதா என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர். தகவலின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.