/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகவானின் நாம உச்சரிப்பே சிறந்த தர்மம் ;ஸ்ரீ சுதர்சன பாகவதர் பேச்சு
/
பகவானின் நாம உச்சரிப்பே சிறந்த தர்மம் ;ஸ்ரீ சுதர்சன பாகவதர் பேச்சு
பகவானின் நாம உச்சரிப்பே சிறந்த தர்மம் ;ஸ்ரீ சுதர்சன பாகவதர் பேச்சு
பகவானின் நாம உச்சரிப்பே சிறந்த தர்மம் ;ஸ்ரீ சுதர்சன பாகவதர் பேச்சு
ADDED : ஜன 09, 2024 10:51 PM
உடுமலை;'தர்மங்களில் சிறந்த, தர்மம் பகவானின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே ஆகும்,' என ஸ்ரீ சுதர்சன பாகவதர் பேசினார்.
உடுமலை காந்திநகர் விநாயகர் கோவில் அருகில், நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. இம்மையத்தில், அகண்ட மஹா மந்திர கீர்த்தனம் மற்றும் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு கடந்த, 8ம் தேதி துவங்கியது.
ஏழு நாட்கள் தினமும் காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாம சங்கீர்த்தனம் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை ஸ்ரீபரத்ஜி முன்னிலை வகித்து பேசினார். ஸ்ரீ சுதர்சன பாகவதர் பாகவத உபன்யாசம் செய்தார்.
அவர் பேசியதாவது: கலியுகத்தில் வாழும் மக்களும் எளிய முறையில், உய்ய ஏற்ற வழி, பகவான் நாமத்தை சொல்லிக்கொண்டு இருப்பதே மட்டுமேயாகும்.
நாரதர் எப்போதும் சதா நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே பல்வேறு பலன்களை பெற்றார்.
மஹாபாரதத்தில், குருேஷத்திர யுத்தம் முடிந்ததும், அம்பு படுக்கையில், தன் இறுதி காலத்தை எதிர் நோக்கி கொண்டிருந்த பீஷ்மரிடம், தர்மத்திலேயே சிறந்த தர்மம் எது என கேட்டனர்.
அதற்கு அவர், விஷ்ணு சஹஸ்ரநாமம், அதாவது பகவான் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை சொல்லிக்கொண்டே இருப்பதே, உயர்ந்த தர்மம் என தெரிவித்தார். பகவானின் நாமத்தை சொல்லி நாமும் உயர்வு பெறுவோம்.
இவ்வாறு, பேசினார்.
மேலும், தினமும் மாலை 5:00 மணிக்கு உடுமலை நகரின் பல்வேறு பகுதிகளில், பஜனை நடைபெறுகிறது.

