/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டி மாயமாகி வரும் நடைபாதை :பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணடிப்பு
/
புதர் மண்டி மாயமாகி வரும் நடைபாதை :பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணடிப்பு
புதர் மண்டி மாயமாகி வரும் நடைபாதை :பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணடிப்பு
புதர் மண்டி மாயமாகி வரும் நடைபாதை :பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணடிப்பு
ADDED : ஜன 24, 2024 12:27 AM

உடுமலை;தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள நடைபாதை பராமரிப்பில்லாமல், புதர் மண்டிக்காணப்படுவதால், பாதயாத்திரை பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை நகரின் மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த, 2016ல் எஸ்.வி., மில் பகுதியில் இருந்து, நகர எல்லை வரை, நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், பாதசாரிகளுக்காக தேசிய நெடுஞ்சாலையையொட்டி நடைபாதை அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, கொழுமம் ரோடு பிரிவிலிருந்து, 840 மீ., துாரத்துக்கு, 58 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை அமைத்தனர்.
ஆனால், இந்த நடைபாதை பராமரிப்பை, நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், அரசு ஊழியர் குடியிருப்பு முதல் குறிப்பிட்ட துாரத்துக்கு, நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தற்போது, தைப்பூசத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து உடுமலை வழியாக பழநிக்கு, பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே பக்தர்களும், இதர பாதசாரிகளும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில், அவ்வழியாக நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவியரும் நடந்து செல்கின்றனர்.
நடைபாதை பயன்பாட்டில் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆபத்தான முறையில், அவர்கள் நடந்து செல்கின்றனர்.
இதே போல், பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை அமைக்கப்பட்ட நடைபாதையும் ஆக்கிரமிப்புகளால், மாயமாகி விட்டது.
விபத்துகளை தவிர்க்கவும், 58 லட்சம் ரூபாய் அரசு நிதியில், அமைக்கப்பட்ட நடைபாதை முற்றிலுமாக சிதிலமடையும் முன், நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து பராமரிப்பு பணிகளை துவக்க வேண்டும்.
இது குறித்து, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தியும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

