/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி: பொழுதுபோக்கு அபாரம்
/
லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி: பொழுதுபோக்கு அபாரம்
ADDED : ஜன 24, 2024 01:42 AM

திருப்பூர்;திருப்பூர், காங்கயம் சாலை, பத்மினி கார்டன் மைதானத்தில், லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் விளையாடி மகிழ டோரா டோரா, பிரேக் டான்ஸ், கப் அண்டு சாசார், ஏர் பலுான், குட்டி ரயில் மற்றும் கார், ஜம்பிங் பலுான், டிராகன் மற்றும் 30 ஆயிரம் பந்துகளை உள்ளடக்கிய பந்து அறை, பேய் வீடு, 3டி ேஷா என, ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அறுசுவை உணவும் உண்டு. பேன்சி, அழகு சாதன பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என, 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே இடத்தில், 30 செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.'வரும், 28ம் தேதியுடன் பொருட்காட்சி நிறைவு பெற உள்ள நிலையில், 25 முதல், 28ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களில் உற்சாகத்துடன் பொழுது போக்கலம்,' அதன் நிர்வாகி சந்திரசேகர் தெரிவித்தார்.

