/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொழிப்பாடத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது
/
மொழிப்பாடத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது
ADDED : மே 10, 2025 12:59 AM
பிளஸ் 2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையே, 83 மற்றும் 113 பேர், கடந்தாண்டு தேர்ச்சி பெறவில்லை. நடப்பாண்டு முறையே, 80 மற்றும், 100 ஆக இது குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவில், கணக்கு பதிவியலில் கடந்தாண்டு, 202 பேர் தேர்ச்சி பெறவில்லை; நடப்பாண்டு இது, 159 ஆக குறைந்துள்ளது. விலங்கியலில் கடந்தாண்டு ஒருவர் மட்டுமே தேர்வாகவில்லை; நடப்பாண்டு இது, நான்காக உயர்ந்துள்ளது.
இயற்பியலில், 93 ஆக இருந்த தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை, 90 ஆக குறைந்துள்ளது. வேதியியலில், 43 பேர் கடந்தாண்டு தேர்ச்சி பெறவில்லை; நடப்பாண்டு இது, 103 ஆக உயர்ந்துள்ளது. உயிரியலில், இரண்டு பேர் மட்டுமே தேர்ச்சி பெறாத நிலை இருந்தது; நடப்பாண்டு இது, 29 ஆக அதிகரித்துள்ளது.
தாவரவியலில், இரண்டு பேர் தேர்ச்சி பெறாமல் இருந்தனர்; ஆறாக உயர்ந்துள்ளது. கணினி அறிவியலில், ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறாத நிலை இருந்தது; இது, ஒன்பதாக உயர்ந்துள்ளது. கணிதத்தில், கடந்தாண்டு, 94 பேர் தேர்ச்சி பெறவில்லை; இம்முறை, 74 பேர் தேர்ச்சி பெறவில்லை.
வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை, 14 ல் இருந்து, 34 ஆக உயர்ந்துள்ளது. பொருளியலில், 90 பேர் கடந்தாண்டு தேர்ச்சி பெறவில்லை; நடப்பாண்டு இது, 52 ஆக குறைந்துள்ளது.
வணிகவியில், 83 இருந்த தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை, நடப்பாண்டு, 89 ஆகியுள்ளது. புள்ளியியல், கடந்த முறை ஆறு பேர் தேர்ச்சி பெறவில்லை; இம்முறை தேர்வெழுதிய, 342 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், புள்ளியியல், 100 சதவீத தேர்ச்சி.
'புள்ளியியல், வணிக கணிதத்தில், கடந்த முறை சென்டம்; இம்முறை இல்லை', கடந்த முறை சென்டம் ரிசல்ட் பெற்ற நுண்உயிரியியல், உயிர்வேதியியல், தொடர்பு ஆங்கிலம், ேஹாம் சயின்ஸ், அரசியல் அறிவியல், சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), நர்சிங், பாடங்களில் மீண்டும் சென்டம் ரிசல்ட் கிடைத்துள்ளது.
கடந்த முறை சென்டம் பெற்ற புள்ளியியலில் இம்முறை, வணிக கணிதம் பாடங்களில் முறையே, ஆறு மற்றும் மூன்று பேர் தேர்ச்சி பெறாததால், இம்முறை முழு தேர்ச்சி கைநழுவி போனது.
அதேநேரம் கடந்த முறை தலா ஒருவர் மட்டும் தேர்ச்சி பெறாததால், சென்டம் வாய்ப்பு கிடைக்காமல் போன, புவியியல், ஊட்டச்சத்தியல் பாடப்பிரிவு, இம்முறை, நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.