/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி
/
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி
ADDED : ஜன 13, 2024 11:39 PM

திருப்பூர்;திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பத்தாம் ஆண்டு டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி முருகம்பாளையத்தில் உள்ள வயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கி வரும், 20ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று துவங்கிய போட்டியை, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் சந்திரன் மற்றும் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் அணி அபாரம்
காலையில் நடந்த முதல் போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியும், கர்நாடகா, சி.ஜி., ஹப் ஆப் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி, 30 ஓவரில், 5 விக்கெட் இழந்து, 275 ரன் எடுத்தது. அபாரமாக விளையாடிய தேவ் அர்ஜூன், 100 ரன், ராகவன், 81, பீபேஷ், 67 ரன் எடுத்தனர்.
கடினமான இழக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடகா அணி, 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 94 ரன் எடுத்து படுதோல்வியடைந்தது. திருப்பூர் அணி, 181 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 100 ரன் எடுத்த தேவ் அர்ஜூன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அணி அசத்தல்
மற்றொரு போட்டியில், தமிழ்நாடு டான்போஸ்கோ அணியும், கேரளா திருப்புனித்துரா கிரிக்கெட் கிளப்பும் மோதியது. முதலில் களமிறங்கிய கேரளா அணி, 30 ஓவரில், 5 விக்கெட் இழந்து, 152 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி, 28 ஓவரில், 5 விக்கெட் இழந்து, 156 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர்.

