/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஜன 19, 2024 04:35 AM

பொங்கலுார் : பொங்கலுார் அருகே சேமலை கவுண்டம் பாளையம் வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம், வானவஞ்சேரி அலகுமலை பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் ரத வீதியில் நடைபெற்றது.
வலுப்பூரம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, காப்பு கட்டுதல், அம்மன் திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை அம்மன் புறப்பாடு ஆகியன நடந்தது.
நேற்று மாலை, 3:00 மணிக்கு அம்மன் தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தை பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாலை, 5:00 மணிக்கு நிலையை அடைந்தது.
வலுப்பூரம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் சிதம்பரம் தலைமையில் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், கோவில் பூசாரிகள், பணியாளர்கள் தேரோட்ட ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

