/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயா மாணவி இன்ஜி., தர வரிசையில் சாதனை
/
விகாஸ் வித்யாலயா மாணவி இன்ஜி., தர வரிசையில் சாதனை
ADDED : ஜூலை 04, 2025 11:18 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, இன்ஜினியரிங் கல்விக்கான தரவரிசை பட்டியலில் சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவி கோதைகாமாட்சி, '200க்கு 200 'கட் ஆப்' பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.
இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவியின் தொடர் சாதனையை பாராட்டும் வகையில், பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பரிசு வழங்கி கவுரவித்தார்.