ADDED : செப் 17, 2025 11:56 PM
திருப்பூர்; விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுதும் கொடியேற்றப்பட்டு, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது. காங்கயம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பிரட் ஆகியவை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் சீனிவாசன், மோட்டார் சங்க தலைவர் தண்டபாணி, செயலாளர் அம்சவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.
l பல்லடத்தை அடுத்த வதம்பச்சேரியில், பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு, தமிழக கைத்தறி பேரவை மாநில தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவை மண்டல கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க தலைவர் சந்திரசேகர், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக, தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்று விழா நடந்தது.

