/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்து தடுக்க வேகத்தடை அறக்கட்டளை வரவேற்பு
/
விபத்து தடுக்க வேகத்தடை அறக்கட்டளை வரவேற்பு
ADDED : செப் 24, 2025 11:55 PM

சேவூர்: சேவூர், கைகாட்டி சாலையில் வேகத்தடை இல்லாததால் பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது என மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் அளித்த கோரிக்கையை தொடர்ந்து,வேகத்தடை அமைக்கப்பட்டது.
அவிநாசி - புளியம்பட்டி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதிலும், சேவூர் கைகாட்டி கூட்டுறவு வங்கி, துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு மருத்துவமனை, வணிக வளாகங்களும் உள்ளன. இதுதவிர, புளியம்பட்டி - - சத்தியமங்கலம் - மைசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலையில், வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்து ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதால், மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் கிராமசபா கூட்டம், நெடுஞ்சாலைத்துறை, சேவூர் போலீசார் மற்றும் திருப்பூர் கலெக்டர் ஆகியோருக்கு வேகத்தடை அமைக்க வேண்டுமென, இரண்டு ஆண்டாக கோரிக்கை அளித்து வந்தனர். இதனால், சேவூர் கூட்டுறவு வங்கி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் மக்கள் சேவகன் அறக்கட்டளையினர், நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

