/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை மாவட்டத்தில் 30ம் தேதி 'என் மண், என் மக்கள்,' யாத்திரை
/
தி.மலை மாவட்டத்தில் 30ம் தேதி 'என் மண், என் மக்கள்,' யாத்திரை
தி.மலை மாவட்டத்தில் 30ம் தேதி 'என் மண், என் மக்கள்,' யாத்திரை
தி.மலை மாவட்டத்தில் 30ம் தேதி 'என் மண், என் மக்கள்,' யாத்திரை
ADDED : ஜன 24, 2024 11:58 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், வரும், 30 மற்றும், 31 ம் தேதி நடக்கவுள்ள, 'என் மண், என் மக்கள்' யாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருவண்ணாமலை, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வரும், 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிகழ்ச்சி, வரும், 30 மற்றும், 31 ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது. வரும், 30 ம் தேதி, கீழ்பென்னாத்துார், கலசப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளிலும், 31 ம் தேதி, செங்கம் தொகுதியிலும், அன்று, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்துார் தொகுதிகளிலும் யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையில் திரளான, பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று, திருவண்ணாமலையில் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட, ஒன்றிய, அணிகள் பிரிவு நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திரா நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். பா.ஜ., மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், உள்ளிட்ட பலர், யாத்திரையை வெற்றி பெற செய்வது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினர்.

