/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை சிறை
/
மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை சிறை
ADDED : ஜன 14, 2024 12:47 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 47 வயது கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி, கருத்து வேறுபாடால் பிரிந்து சென்றார். இவர்களது, 13 வயது மகள் தந்தையுடன் வசித்தார்.
கூலித்தொழிலாளி, இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கடந்த, 2020 ஜூலை, 13ல் வீட்டிலிருந்த, 13 வயது மகளை மிரட்டி தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், ஆரணி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர், ஏழு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சமூக நலத்துறை அதிகாரிகள் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார், தொழிலாளியை கைது செய்தனர். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
நீதிபதி பார்த்தசாரதி, நேற்று முன்தினம் மாலை, கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

