/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை கோவிலில் இன்ஸ்பெக்டரை தாக்கிய விவகாரம்: ஊழியர் கைது
/
தி.மலை கோவிலில் இன்ஸ்பெக்டரை தாக்கிய விவகாரம்: ஊழியர் கைது
தி.மலை கோவிலில் இன்ஸ்பெக்டரை தாக்கிய விவகாரம்: ஊழியர் கைது
தி.மலை கோவிலில் இன்ஸ்பெக்டரை தாக்கிய விவகாரம்: ஊழியர் கைது
UPDATED : ஜன 24, 2024 12:16 PM
ADDED : ஜன 24, 2024 11:56 AM

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதியை கன்னத்தில், 'பளார்' என அறைந்த, விவகாரத்தில் கோவில் ஊழியர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம். இவரது தம்பி ஸ்ரீதரன். தி.மு.க.,வை சேர்ந்த இவர், முன்னாள் திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் மற்றும் தி.மு.க., மாநில செயற்கு உறுப்பினராக உள்ளார். இவரது குடும்பத்தை சேர்ந்தவர் சிவசங்கரி. இவர், கடந்த மாதம், 27 ம் தேதி, அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யும்போது அவரை, அங்கிருந்த தேசூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்ற பக்தர்களுக்கு மறைக்காமல் தரிசனம் செய்ய கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், பக்தர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் காந்திமதியின் கன்னத்தில், 'பளார்' என அறைந்ததில் அவர் நிலை குலைந்தார். ஸ்ரீதரனுக்கு ஆதரவாக கோவில் ஊழியர் ரமேஷ், 32, செயல்பட்டார்.
திருவண்ணாமலை டவுன் போலீசார், ஸ்ரீதரன், சிவசங்கரி, கோவில் ஊழியர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், 3 பேரும் தலைமறைவான நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் ஊழியர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள தி.மு.க., நிர்வாகி ஸ்ரீதரன், சிவசங்கரி ஆகியோரை தேடி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை, தி.மு.க., நிர்வாகி ஸ்ரீதரன் மற்றும் சிவசங்கரி ஆகியோரின் ஜாமின் மனுவை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

