/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் நகை திருட்டு
/
அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 21, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் கடந்த, 15ம் தேதி கொடியேற்றப்பட்டு, 10 நாள் திருவிழா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு, மாரியம்மன் சிங்கமுக வாகனத்தில் வீதி உலா நடத்த, அம்மனுக்கு நகை மற்றும் மலர் மாலைகள் கொண்டு கோவில் வளாகத்தில் அலங்காரம் நடந்தது.
அலங்காரம் முடிந்து ஊர்வலம் நடந்த சிறிது நேரத்தில், அம்மன் கழுத்தில் இருந்த, 5 சவரன் நகையை யாரோ திருடி சென்றனர்.
கோவில் பூசாரி ஏழுமலை, தர்மகர்த்தா முத்துகிருஷ்ணன் ஆகியோர் புகார் படி, வாணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

