/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
குழாயடி சண்டையால் வி.சி., பிரமுகர் கொலை
/
குழாயடி சண்டையால் வி.சி., பிரமுகர் கொலை
ADDED : ஜூன் 18, 2025 02:41 AM
கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே பொது குழாயில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வி.சி., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சொரகொளத்துாரை சேர்ந்தவர் சுமன், 39. அதே பகுதியை சேர்ந்தவர் வி.சி., கட்சியை சேர்ந்த இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் காமராஜ், 60. இருவரும் உறவினர்கள்.
இவர்களுக்குள் பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று காலை, 7:00 மணிக்கு நாயுடுமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த காமராஜை, சுமனின் உறவினர்களான கோபி, 29, பார்த்திபன், 25, இருவரும், கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த காமராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று மதியம் உயிரிழந்தார். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.