/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மூவருக்கு அரிவாள் வெட்டு சிறார் உட்பட 5 பேர் கைது
/
மூவருக்கு அரிவாள் வெட்டு சிறார் உட்பட 5 பேர் கைது
ADDED : மே 11, 2025 03:05 AM
திருச்சி:திருச்சியில் மூன்று பேரை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய சிறார் இருவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும், துரைசாமிபுரத்தை சேர்ந்த டார்வின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, பாலமுருகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த டார்வினும், அவரது கூட்டாளிகளும் அவருடன் தகராறு செய்துள்ளனர்.
டார்வின் தரப்பினர், பாலமுருகன் மற்றும் நண்பர்கள் பிரவீன், ரபேல் ஆகியோரை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி தப்பினர்.
காயமடைந்த பாலமுருகன் உட்பட மூவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்த பாலக்கரை போலீசார், டார்வினையும், அவரது கூட்டாளிகள் ஸ்ரீராம், ஜான் மற்றும் 17 வயது சிறார் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். டார்வின் கோஷ்டியினர், பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.