/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கொள்ளிடக் கரையில் ஹெலிபேட் அமைக்கும் பணி
/
கொள்ளிடக் கரையில் ஹெலிபேட் அமைக்கும் பணி
ADDED : ஜன 19, 2024 02:26 AM
திருச்சி:ஜன. 20ம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.
நாளை (ஜன. 20) காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கும் ஹெலிகாப்டரில் செல்கிறார்.
அதற்காக திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இ.ஆர். பள்ளி மைதானம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடல் ஆகியவற்றை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பஞ்சக்கரை மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஹெலிபேட் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
பிரதமர் மோடி அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதால் பஞ்சக்கரையில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

