/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கடைகளை ' அப்பளம் ஆக்கிய' தி.மு.க., பிரமுகரின் போதை மகன்
/
கடைகளை ' அப்பளம் ஆக்கிய' தி.மு.க., பிரமுகரின் போதை மகன்
கடைகளை ' அப்பளம் ஆக்கிய' தி.மு.க., பிரமுகரின் போதை மகன்
கடைகளை ' அப்பளம் ஆக்கிய' தி.மு.க., பிரமுகரின் போதை மகன்
ADDED : மார் 28, 2025 01:28 AM
திருச்சி:தி.மு.க., ஒன்றிய செயலர் மகன் போதையில் ஓட்டிச் சென்ற கார் மோதி, நான்கு கடைகள், சரக்கு ஆட்டோ, ஸ்கூட்டி சேதமடைந்தது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலராக இருப்பவர் கதிர்வேல். இவரது மகன் அண்ணாமலை கிருஷ்ணன், 21; மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், 'இன்னோவா' காரில் அண்ணாமலை கிருஷ்ணன், செங்கதிர்சோலையில் உள்ள தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர், மது போதையில் இருந்ததால், வழியில் உய்யகொண்டான் திருமலை பகுதியில், சண்முகாநகரில், சாலையோரம் இருந்த கறிக்கடை, தள்ளுவண்டி, மட்டன் கடை, மீன் கடை ஆகியவற்றின் மீது இடித்து சேதப்படுத்தி உள்ளார். மேலும் அங்கு நின்றிருந்த சரக்கு ஆட்டோ, ஸ்கூட்டி ஆகிவற்றை இடித்து தள்ளி விட்டு, காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
புகாரின்படி, திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து போலீசார், செங்கதிர்சோலை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.