/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மகள் குழந்தையை கொன்ற தந்தை போலீசில் சரண்
/
மகள் குழந்தையை கொன்ற தந்தை போலீசில் சரண்
ADDED : ஜன 24, 2024 01:39 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் செக்கனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ஜேக்கப், 49. இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் மரிய வினோதினிக்கு, 28, திருமணமாகி, ஆண் குழந்தை இருக்கிறது. மூன்றாண்டுகளாக கணவரை பிரிந்து, தந்தையுடன் அவர் வசிக்கிறார்.
இந்நிலையில் மரியவினோதினி கர்ப்பமானார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, வயிற்றில் கட்டி என்று சமாளித்தார். இவருக்கு கடந்த, 6ம் தேதி வையம்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், அந்த குழந்தையை கிணற்றில் மரியஜேக்கப் வீசி கொலை செய்தார்.
நேற்று காலை, அவர் வையம்பட்டி போலீசில் சரணடைந்தார். தந்தையுடன் வசித்து வந்த மகள் கர்ப்பமானது குறித்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

