/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கலெக்டர் ஆபீசை ட்ரோன் வீடியோ எடுத்த 2 பேர் கைது
/
கலெக்டர் ஆபீசை ட்ரோன் வீடியோ எடுத்த 2 பேர் கைது
ADDED : ஜூன் 21, 2025 11:38 PM
வேலுார்:வேலுார் கலெக்டர் அலுவலகத்தை 'ட்ரோன்' கேமரா வாயிலாக வீடியோ எடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் சத்துவாச்சாரியிலுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை, 'ட்ரோன்' கேமரா வாயிலாக இருவர், அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், நேற்று காலை 10:30 மணியளவில் வீடியோ எடுத்துள்ளனர். இதை கலெக்டர் சுப்புலட்சுமியின் கவனத்திற்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். அவரது உத்தரவின்படி, சத்துவாச்சாரி வி.ஏ.ஓ., சுப்பிரமணி, ட்ரோன் கேமார வாயிலாக வீடியோ எடுத்த இருவரை பிடித்து, சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்படி, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், காட்பாடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 32, திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்தை சேர்ந்த ஜீலைன், 29, என தெரிந்தது. வரும், 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேலுார் வரவுள்ள நிலையில், இருவர் அனுமதியின்றி, ட்ரோன் கேமரா வாயிலாக கலெக்டர் அலுவலக வளாகத்தை வீடியோ எடுத்து, கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.