/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்
/
நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்
ADDED : பிப் 02, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பஞ்., கே.மோட்டூரைச் சேர்ந்தவர் தேவன், 30, சத்தீஸ்கர் மாநிலத்தில் துணை ராணுவத்தில் பணிபுரிந்தார். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு சென்றார். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே வனப்பகுதியில், சக வீரர்களுடன் முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, நக்சல் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின் அடக்கம் செய்யப்பட்டது.

