/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அடையாளம் தெரியாத ஆண் அடித்து கொலை
/
அடையாளம் தெரியாத ஆண் அடித்து கொலை
ADDED : ஜன 23, 2024 12:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் அருகே, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், ஆசனாம்பட்டு பஞ்., பனங்காட்டேரி கிராம வனப்பகுதியில், 35, வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் தலையில், பலத்த காயமும், வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும், தலையில், கல் மற்றும் கம்பி போன்றவற்றால் தாக்கி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கொலையானவர் யார், கொலை செய்தவர்கள் யாரென, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

