/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோழிகளுக்கான இரு வார தடுப்பூசி முகாம்
/
கோழிகளுக்கான இரு வார தடுப்பூசி முகாம்
ADDED : பிப் 01, 2024 11:50 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கோழிகளுக்கான இரு வார தடுப்பூசி முகாம் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்க, தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக் கழிச்சல் இரு வார தடுப்பூசி முகாம்கள், கிராமங்களில் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு கடந்த 1ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதனால், கோழி வளர்க்கும் பொது மக்கள், வெள்ளைக்கழிச்சல் நோய் காரணமாக கோழிகள் இறப்பைத் தவிர்க்க முகாம்களில் பங்கேற்று தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

