/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு
/
'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' டி.ஜி.பி., மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜன 24, 2024 04:35 AM
விழுப்புரம் : விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரியின் காரை மறித்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் தரப்பில், இவ்வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு தடை ஏதும் இல்லை எனவும், 24ம் தேதிக்குள் (இன்று) இவ்வழக்கு விசாரணையை முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கும்படி மனு தாக்கல் செய்தார்.
அதற்கு, ஜன.24க்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டிய மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை நாளை (இன்று 24ம் தேதி) நடைபெறும் என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ராஜேஷ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், விழுப்புரம் நீதிமன்றமே மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

