/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுாரில் நாளை அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
வளவனுாரில் நாளை அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஜன 24, 2024 04:19 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.
வளவனுார் கடைவீதியில், நாளை மாலை 7:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். வளவனுார் நகர செயலாளர் முருகவேல் வரவேற்கிறார்.
நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றுகிறார். தலைமைக்கழக பேச்சாளர் ஆளூர் அப்துல் ஜலீல், முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கர பாணி, அர்ஜுனன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணைச் செயலாளர்கள் அற்புதவேல், ஏழுமலை, ஜெ., பேரவை இணைச் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் விளக்கவுரையாற்றுகின்றனர்.
மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

