/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் மழை நிவாரணம் கேட்டு போராட்டம்
/
கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் மழை நிவாரணம் கேட்டு போராட்டம்
கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் மழை நிவாரணம் கேட்டு போராட்டம்
கரும்புக்கான ஊக்கத்தொகை மற்றும் மழை நிவாரணம் கேட்டு போராட்டம்
ADDED : ஜன 14, 2024 05:55 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வாயில் முன் மாவட்ட தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் தலைமையில், கரும்புகளுடன் திரண்ட விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வானுார் தாலுகா விவசாயிகள் புதுச்சேரி எல்.ஆர்., பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பினர். அந்த ஆலை மூடப்பட்டதால், தற்போது, முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், விவசாயிகள் 2022-23ம் ஆண்டுக்கு அனுப்பியுள்ள கரும்புக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
முண்டியம்பாக்கம் ஆலை பகுதி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இதர விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தும், சர்க்கரை துறை ஆணையர் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும் பேசினர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வேர்க்கடலை, உளுந்து, காராமணி, தர்பூசணி, பூசணி உள்ளிட்ட பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

