/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாள் முழுதும் அன்னதான திட்டம் துவக்கம்

ADDED : ஜன 23, 2024 11:47 PM
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தினசரி மதியம் குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதை விரிவுபடுத்தி நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, அமைச்சர் மஸ்தான், பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
நிகழ்ச்சியில் மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், துணைத் தலைவர் விஜயலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.