/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 01, 2024 11:51 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் 100 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த தி.மு.க., இளைஞரணி தீனா, அ.ம.மு.க., வார்டு செயலாளர் பிரகாஷ் தலைமையிலான மாற்றுக் கட்சியினர் 100 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், சக்கரபாணி எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முருகன், சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் குமரன், துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், நகர இளைஞரணி பாஸ்கர், கவுன்சிலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

