/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நடுநிலை பள்ளிகளில் உதவி இயக்குனர் ஆய்வு
/
அரசு நடுநிலை பள்ளிகளில் உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 25, 2025 10:07 PM

விழுப்புரம் : ழுப்புரம் அருகே அரசு நடுநிலைப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தும் வகையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் அடைவு திறனை மேம்படுத்தும் விதத்தில், 100 நாட்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் எழுதுதல் மற்றும் வாசித்தல் செயல்பாடுகள் நடந்து வருகிறது. இதனை சென்னை தொடக்கக் கல்வி துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
கோலியனுார் அடுத்த தொடர்ந்தனுார், நல்லரசன்பேட்டை, விக்கிரவாண்டி அடுத்த தொரவி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.