/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பட்டுசேலை விற்பனையகம், மசாஜ் கருவிகள் அமைப்பு

ADDED : ஜன 19, 2024 07:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக 3 எலக்ட்ரானிக் மசாஜ் கருவிகள் மற்றும் பட்டு சேலை விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ், 23.5 கோடி ரூபாய் செலவில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக 3 எலக்ட்ரானிக் மசாஜ் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர கால்களுக்கு மட்டும் மசாஜ் செய்வதற்காக தனி எலக்ட்ரானிக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
முழு உடல் மசாஜ் செய்வதற்கு 5 நிமிடத்திற்கு ஒருவருக்கு 50 ரூபாய், 15 நிமிடங்களுக்கு நபருக்கு 130 ரூபாய், இதே போல் காலுக்கு மட்டும் மசாஜ் செய்வதற்கு 5 நிமிடத்திற்கு 25 ரூபாயும், 10 நிமிடத்திற்கு 50 ரூபாய் என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மசாஜ் செய்ய விரும்பும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கர்ப்பிணிகள் மற்றும் இருதய பிரச்னை உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது.
இது ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
இதற்காக பணியாளர் நியமிக்கப்பட்டு, ஆட்டோ மேட்டிக் கருவி மூலம் மசாஜ் செய்யப்படுகிறது.
பட்டுசேலை விற்பனை
ரயில் நிலையத்தில், கைத்தறி துணிகள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு ரயில் நிலையம்: ஒரு தயாரிப்பு' விற்பனை திட்டத்தின் படி, பிரதான நுழைவு வாயிலில், சிறுவந்தாடு பட்டு சேலைகள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு துவங்கப்பட்ட விற்பனை நிலையத்தில், பட்டு சேலைகள், பட்டு சட்டைகள் உள்ளிட்ட துணிகளை, பயணிகள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.