/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை
/
ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 01, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவுக்கு, தீ வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், மருதுார், ஊரல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி பிரேமா, 45; இவருக்கு சொந்தமான ஆட்டோவை, நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, ஆட்டோ முழுதும் எரித்து சேதமடைந்திருந்து.
இதுகுறித்து அவர், அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைத்த நபரைத் தேடி வருகின்றனர்.

