/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 01, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தொழு நோய் தினத்தை முன்னிட்டு தொழு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் என்.பவித்ரா தலைமை தாங்கினார். டாக்டர் ஆர்.பவித்ரா, ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தொழுநோய் குறித்து பொதுமக்களுக்கு உள்ள அச்சம், சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் தொழுநோய் ஒழிப்பு குறித்த உறுதி மொழி ஏற்றனர்.

