/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 24, 2024 04:18 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கல்லுாரி மாணவ, மாணவிகள் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி திருச்சி சாலை வழியாக சிக்னல் பகுதி வரை சென்று திரும்பினர். சாலையின் இடதுபுறமாக மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். பாதசாரிகள் நடைபாதையை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

