/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ரயில்வே பாதையில் 'பவுஸ்டிங் கர்டர்' பணி தீவிரம்
/
கண்டமங்கலம் ரயில்வே பாதையில் 'பவுஸ்டிங் கர்டர்' பணி தீவிரம்
கண்டமங்கலம் ரயில்வே பாதையில் 'பவுஸ்டிங் கர்டர்' பணி தீவிரம்
கண்டமங்கலம் ரயில்வே பாதையில் 'பவுஸ்டிங் கர்டர்' பணி தீவிரம்
ADDED : ஜன 24, 2024 04:34 AM

விழுப்புரம் : கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில், 'பவுஸ்டிங் கர்டர்' அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி எம்.என்.குப்பம் வரை, சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
இதனையடுத்து, மெயின் பாலத்தில் இரும்பு பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்டமங்கலம் ரயில்வே பாதையின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில், ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
ரயில்வே துறையின் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட 'பவுஸ்டிங் கர்டர்' இணைப்பு பணி முடிந்ததும், சாலை மார்க்கமாக நகர்த்தி வைக்கப்படும். கடந்த சில தினங்களாக இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.