/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெரிசலில் சிக்கிய முதல்வர் 'செம டோஸ்' வாங்கிய போலீஸ் விழுப்புரம் போலீசுக்கு ஐ.ஜி., செம 'டோஸ்'
/
நெரிசலில் சிக்கிய முதல்வர் 'செம டோஸ்' வாங்கிய போலீஸ் விழுப்புரம் போலீசுக்கு ஐ.ஜி., செம 'டோஸ்'
நெரிசலில் சிக்கிய முதல்வர் 'செம டோஸ்' வாங்கிய போலீஸ் விழுப்புரம் போலீசுக்கு ஐ.ஜி., செம 'டோஸ்'
நெரிசலில் சிக்கிய முதல்வர் 'செம டோஸ்' வாங்கிய போலீஸ் விழுப்புரம் போலீசுக்கு ஐ.ஜி., செம 'டோஸ்'
ADDED : ஜன 23, 2024 05:23 AM
விழுப்புரம் அருகே முதல்வரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், கவனக்குறைவாக இருந்ததாக போலீசாருக்கு ஐ.ஜி., டோஸ் விட்டார்.
சேலத்தில் தி.மு.க., இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் மாலை அங்கிருந்து கார் மூலம் சென்னைக்குச் சென்றார்.
இதற்கிடையே வார இறுதி நாள்கள் மற்றும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை முதல் உளுந்துார்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில், முதல்வரின் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியைக் கடந்து வந்தபோது, விழுப்புரம் அருகே அரசு ஊழியர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அருகே ஜானகிபுரம் பைபாசில் மேம்பாலம் பணி நடப்பதால், அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் சரியான பாதை தெரியாமல் தவித்தபடி ஊர்ந்து சென்றதாலும், நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகன அணிவகுப்புக்கு இடையே முதல்வரின் கார் மெதுவாக ஊர்ந்து, விழுப்புரத்தைக் கடந்து சென்றுள்ளது.
விழுப்புரம் மாவட்ட எல்லையான மடப்பட்டு பகுதியில் இருந்து, முதல்வர் வருகையின்போது, கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி, போக்குவரத்தை சீரமைக்காததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், விழுப்புரம் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கடுமையாக 'டோஸ்' விட்டுள்ளார்.
மேலும், மடப்பட்டு முதல் விழுப்புரம் வரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அலுவலர்களுக்கு, 'மெமோ' அளித்து விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், முதல்வருக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால், பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்வோர், தி.மு.க., மாநாடு முடிந்து செல்லும் வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்ததால், அன்று மாலை முதல் அதிகாலை வரை, வாகனங்களை தடையின்றி அனுப்பி வைக்கப்பட்டது.முதல்வர் வரும்போதும், ஒரு மார்க்கத்தில் வாகனங்கள் நிறுத்தியே வழி விடப்பட்டது.
ஆனால், மேம்பால பணி போன்ற நெருக்கடியால், முதல்வர் வாகனம் சற்று ஊர்ந்து செல்ல நேர்ந்ததாக தெரிவித்தனர்.

