ADDED : மார் 27, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விழுப்புரத்தில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வன், 57, கடந்த 13ம் தேதி விபத்தில் சிக்கி, 24ம் தேதி இறந்தார். அவரது குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை வடகாடைச் சேர்ந்தவர் வீரபாண்டி, 21. இவர், 23ம் தேதி, மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரது குடும்பத்திற்கும், 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.