/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 19, 2024 07:32 AM

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டை, மேல்மலையனுார் பள்ளிகளில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அவலுார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அலுவலர் பிரேமலதா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் முருகன் வரவேற்றார்.
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவிகள் கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தலைமை ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.
இதே போல் மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

