ADDED : ஜன 10, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், 'எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி' திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதையொட்டி, நேற்று செவலப்புரை, மணங்குப்பம், பேரங்கியூர், ஆலம்பாடி அரசு பள்ளிகளின் வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி துாய்மை படுத்தும் பணி நடந்தது.

