ADDED : ஜூன் 26, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் பொது மக்களுக்கு அரசு சார்பில் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம் 25-26ம் ஆண்டு தோட்டக்கலைத் துறை மூலம் மாம்பாக்கம், செம்பாக்கம் கிராமங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் ஊரல் அண்ணாதுரை, பொது மக்களுக்கு தென்னங் கன்றுகளை வழங்கினார். ஊராட்சி தலைவர்கள் வடிவேலு, ஏழுமலை, தோட்டக்கலை அதிகாரி ஜனார்த்தனன், ஊராட்சி துணைத் தலைவர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.