/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 10:49 PM

விழுப்புரம் -தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை வட்டியோடு சேர்த்து வழங்கக்கோரி விழுப்புரத்தில் முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் பேசல் பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கியது. இந்த நிறுவனத்தில் 5.85 கோடி முதலீட்டாளர்கள் 49 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தினர், சம்பந்தபட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய பணம் தராததால் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்து 6 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டுமென உத்தரவிட்டனர்.
ஆனால், நிர்வாகம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக பணத்தை தராமல் காலதாமதம் செய்து வருகிறது. இதை கண்டித்து, நாடு முழுதும் உள்ள முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் இயங்கிய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், 'எங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐகோர்ட் தலைமை நீதிபதி, எங்களுக்காக சட்ட உதவி மையங்கள் மூலம், வழக்கறிஞரை நியமித்து எங்களின் பணம் வட்டியோடு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

