/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி எதிரே நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
பள்ளி எதிரே நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பள்ளி எதிரே நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பள்ளி எதிரே நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 11:46 PM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே நான்கு வழிச்சாலையின் குறுக்கே நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய ஐக்கிய கம்யூ., வட்ட செயலாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுருகன், வட்டார காங்., தலைவர் ராதா, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் உலகநாதன், வி.சி., ஒன்றிய செயலாளர் தமிழ்க்குடி, பொருளாளர் அம்பேத்கர், த.வா.க மாவட்ட செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சாலையைக் கடக்க அரியூர் மேம்பாலம் வரை 1 கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
இதனைத் தவிர்க்க பள்ளி எதிரே நான்கு வழிச்சாலையில் உள்ள இரும்புக் குழாய்களால் ஆன இரண்டு தடுப்பு வேலி மற்றும் சாலை நடுவே காண்கிரீட் தடுப்புச் சுவற்றின் மீது ஏறி தினம் ஆபத்தான நிலையில் சாலையைக் கடக்கின்றனர்.
இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பள்ளிக்கு எதிரே நான்கு வழிச்சாலையின் குறுக்கே நடைபாதை மேம்பாலம் அமைக்க தேசிய நெடுங்சாலை ஆணையமும், கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

