/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது
/
பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது
ADDED : ஜன 24, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தி தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மடப்பட்டு - கொரட்டூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கையில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், சரவணம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரகு மகன் உதயா, 23; பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்டியான் மகன் யுனேஸ்டின், 24; என தெரிந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

