/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட இளையோர் தடகளம் நாளை துவக்கம்
/
மாவட்ட இளையோர் தடகளம் நாளை துவக்கம்
ADDED : செப் 11, 2025 03:13 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்தாண்டுக்கான மாவட்ட இளையோர் தடகள போட்டி நாளை துவங்குகிறது.
மாவட்ட தடகள சங்கத்தால், விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8:30 மணிக்கு, இந்தாண்டிற்கான போட்டி, துவங்குகிறது.
இதில், 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவுகளில், மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடக்கிறது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டி ஓட்டம், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இரண்டு தனி நபர் போட்டிகள் மற்றும் ஒரு தொடர் ஓட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
போட்டியில் பங்கேற்க கூடிய அனைவருக்கும் டி ஷர்ட், மதிய உணவு வழங்கப்படும். வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுத்தொகை, கோப்பை வழங்கப்படும்.
இதில், மொத்த பரிசுத்தொகை 98 ஆயிரம் ரூபாய். மாவட்ட போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், செங்கல்பட்டில் வரும் 19ம் தேதி நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
இவ்வாறு தெரிவித்தனர்.