/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி சீட்டு பிடித்து மோசடி: பைனான்ஸ் நிறுவனத்திற்கு 'சீல்'
/
தீபாவளி சீட்டு பிடித்து மோசடி: பைனான்ஸ் நிறுவனத்திற்கு 'சீல்'
தீபாவளி சீட்டு பிடித்து மோசடி: பைனான்ஸ் நிறுவனத்திற்கு 'சீல்'
தீபாவளி சீட்டு பிடித்து மோசடி: பைனான்ஸ் நிறுவனத்திற்கு 'சீல்'
ADDED : ஜன 23, 2024 10:26 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தீபாவளி சீட்டு பிடித்து மோசடி செய்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப், 35; இவர், வந்தவாசியை தலைமையிடமாகக் கொண்டு ஏ.பி.ஆர்.,பைனான்ஸ் நிறுவனத்தை விக்கிரவாண்டி கீழ்மாட வீதியில் நடத்தி வந்தார்.
இந்நிறுவனம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகளை திறந்து 2000 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்து ஏமாற்றியதால் பொதுமக்கள் அனைத்து கிளைகளிலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புகாரின் பேரில், திருவண்ணாமலை போலீசாரால், அல்தாப் தாசிப் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில், பணம் கட்டி ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் போலீசார், வி.ஏ.ஓ.,க்கள் சீனுவாசன், அண்ணாமலை ஆகியோர், விக்கிரவாண்டியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் ஜோதி, மேற்பார்வையாளர்கள் ேஹமா, அய்யனார் முன்னிலையில் சோதனை நடத்தினர். அதில், ஒரு லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி, நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நிறுவனத்தை திறந்து சோதனை செய்வதை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் நிறுவனத்தின் முன் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இனி விழிப்புணர்வுடன் இருங்கள் என அறிவுறுத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தார்.

