/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., இளைஞரணி மாநாடு சுடர் வரவேற்பு அளிக்க மா.செ., அழைப்பு
/
தி.மு.க., இளைஞரணி மாநாடு சுடர் வரவேற்பு அளிக்க மா.செ., அழைப்பு
தி.மு.க., இளைஞரணி மாநாடு சுடர் வரவேற்பு அளிக்க மா.செ., அழைப்பு
தி.மு.க., இளைஞரணி மாநாடு சுடர் வரவேற்பு அளிக்க மா.செ., அழைப்பு
ADDED : ஜன 19, 2024 07:38 AM
செஞ்சி : சேலத்திற்கு கொண்டு செல்லப்படும் தி.மு.க., இளைஞரணி மாநாட்டு சுடருக்கு இன்று திண்டிவனத்தில் வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரள மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாட்டு சுடர் ஓட்டத்தை நேற்று காலை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
இந்த சுடர் ஓட்டம் விழுப்புரம் மாவட்டத்தை இன்று கடந்து செல்ல உள்ளது. சுடருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இன்று 19ம் தேதி காலை 8:00 மணிக்கு திண்டிவனம் ஹோட்டல் ஆர்யாஸ் எதிரிலும், 9:00 மணிக்கு மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டு சீனிவாசா திருமண மண்டபம் எதிரிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.