/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் சாலை மறியல்
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் சாலை மறியல்
செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் சாலை மறியல்
செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் சாலை மறியல்
ADDED : ஜன 10, 2024 01:27 AM

செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகளை அனுமதிக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி பகுதியில் சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால் நெல் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மார்க்கெட் கமிட்டிக்கு 12 ஆயிரத்து 500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.
அடுத்து வரும் நாட்களில் மூட்டையை இறக்கி வைத்து ஏலம் நடத்த இட வசதி இல்லை என்பதால் நேற்றும், இன்றும் நெல் கொண்டு வர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
அதிகாரிகள், கமிட்டிக்கு நெல் கொண்டு வரவேண்டாம் என்ற தகவலை செய்தி குறிப்பாக வெளியிடாமல் சில 'வாட்ஸ் ஆப்' குழுவில் மட்டும் வெளியிட்டனர். இந்த தகவல் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
இதனால் வழக்கம் போல் நேற்றும் விவசாயிகள் நெல் கொண்டு வந்தனர். அவர்களை மார்க்கெட் கமிட்டிக்குள் விடாமல் நிர்வாகத்தினர் கேட்டை மூடி தடுத்தனர்.
ஆத்திரமடைந்த விவசாயிகள் காலை 7:00 மணியளவில் மார்க்கெட் கமிட்டி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்து மறியலை 7:20 மணியளவில் கைவிடச் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளை மார்க்கெட் கமிட்டி உள்ளே எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.

