/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி வரத்து வாய்க்கால் அடைத்து சாலை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
/
ஏரி வரத்து வாய்க்கால் அடைத்து சாலை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
ஏரி வரத்து வாய்க்கால் அடைத்து சாலை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
ஏரி வரத்து வாய்க்கால் அடைத்து சாலை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
ADDED : ஜூன் 25, 2025 03:11 AM

விழுப்புரம் : ஏரி வரத்து வாய்க்காலை அடைத்து சாலை அமைத்தது தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் பேசியதாவது;-
வானுார் தாலுகா நல்லாவூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மழைக்காலத்திற்குள் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளத்தை மார்க்கெட் கமிட்டிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பெஞ்ஜல் புயல் வெள்ளத்தில் உடைந்த ஏரிகளை சீரமைக்க வேண்டும்.
கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரிகளின் வரத்து வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்துள்ளனர். இது குறித்து கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், பி.டி.ஓ., ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. கோர்ட்டிற்கு சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என்றால், அங்கு செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்பிரச்னை தொடர்பாக பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம்.
குறுவை சாகுபடிக்கு, வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல்லை, தட்டுப்பாடின்றி இருப்பு வைத்து வழங்க வேண்டும். மாவட்டத்தில் கலப்பு உரங்கள் விற்பனை இருக்கக்கூடாது. கலப்பு உரம் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு மானியத்தொகையை வழங்கவில்லை. 10 நாட்களில் மானியத்தொகை வழங்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இதையடுத்து, பேசிய ஆர்.டி.ஓ., முருகேசன், விவசாயிகள் கோரிக்கைகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கமாறு அறிவுறுத்தினார். தாசில்தார்கள் கனிமொழி, செல்வமூர்த்தி, முத்து, செந்தில்குமார், வித்யாதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.