/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 10:32 PM

விழுப்புரம் : உழவர் பாதுகாப்பு திட்டத்தைக் கைவிடக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன், நிர்வாகக்குழு ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசு விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். நுாறு நாள் வேலைத் திட்டத்திற்கு தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடேன வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
துணைத் தலைவர்கள் ஜீவா ஜெயராமன், பிச்சை, அய்யனாரப்பன், துணைச் செயலாளர்கள் சக்திவேல், ஆறுமுகம், ஜூலி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் கலீல்கான் நன்றி கூறினார்.

