/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
/
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
ADDED : ஜன 21, 2024 04:36 AM

விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தேர்தல் மேற்பார்வையாளர் வள்ளலார் தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின், தேர்தல் மேற்பார்வையாளர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரை படி கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல், திருத்த பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, 2023ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த முகாம்களில் பலர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து, மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து, உண்மைத் தன்மை அறிந்து கொள்ளும் வகையில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும், 59 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அது குறித்து, தற்போது நடந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் கேட்டறியப்பட்டது.
நிறைவாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும், அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
இவ்வாறு தேர்தல் மேற்பார்வையாளர் வள்ளலார் கூறினார்.

