ADDED : ஜூன் 26, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை மற்றும் தென்மண்டல காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தென்மண்டல காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மைய டாக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் தங்கராஜ், சவுந்தர்ராஜன், திருமாவளவன், பழனிராஜ் முன்னிலை வகித்தனர்.
நுரையீரல் சிறப்பு டாக்டர் விஜய ஸ்ருதி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், காற்று மாசால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்தி, 102 பேருக்கு நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. சிஸ் மல்டிமீடியா நிறுவனர் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.